கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.
கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.;
கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலக கட்டடத்தில் நேற்று வெடிகுண்டு வைக்கப் பட்டுள்ளதாக மின்னஞ்சலில் ஆட்சியர் அலுவலகத்திற்கு தகவல் வந்ததுள்ளது. இதை அடுத்து கிருஷ்ணகிரி போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார், மோப்ப நாய் உதவியுடன் ஆட்சியர் அலுவலக வளாகம் முழவதும் தீவிர சோதனை நடத்தினர். இதில் மின்னஞ்சலில் வந்தது பொய் தகவல் என தெரியவந்தது. இதை அடுத்து, மின்னஞ்சல் மூலம் வெடி குண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார் என்று என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.