ஓசூர்: பெண்களுக்கான தோழி விடுதி காணொலியில் முதல்வர் திறப்பு.
ஓசூர்: பெண்களுக்கான தோழி விடுதி காணொலியில் முதல்வர் திறப்பு.;
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று தலைமைச் செயலகத்திலிருந்து, காணொளிக் காட்சி வாயிலாக, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் சார்பில், ஓசூர் மாநகராட்சி அருகில் உள்ள விஸ்வநாதபுரம் கிராமத்தில் ரூ.12 கோடியே 37 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள தோழி விடுதி கட்டடத்தை திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து, ஓசூர் மாநகராட்சி அருகில் உள்ள விஸ்வநாதபுரம் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள தோழி விடுதியில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஒய்.பிரகாஷ் மற்றும் மாநகராட்சி மேயர் திரு.எஸ்.ஏ.சத்யா ஆகியோர் நேற்று குத்து விளக்கு ஏற்றி வைத்து, விடுதியை பார்வையிட்டனர். உடன், ஓசூர் சார் ஆட்சியர் திருமதி.ஆர்.ஏ.பிரியங்கா இ.ஆ.ப., மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.சக்தி சுபாசினி உள்ளிட்ட பலர் உள்ளனர்.