சட்ட விரோதமாக டன் கணக்கில் ரப்பர் கழிவு மற்றும் நச்சு கழிவுகளை மர்மநபர்கள் எரிப்பதால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் - காரியாபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த கிராம மக
சட்ட விரோதமாக டன் கணக்கில் ரப்பர் கழிவு மற்றும் நச்சு கழிவுகளை மர்மநபர்கள் எரிப்பதால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் - காரியாபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த கிராம மக்கள்*;
காரியாபட்டி அருகே தெற்காறு பகுதியில் சட்ட விரோதமாக டன் கணக்கில் ரப்பர் கழிவு மற்றும் நச்சு கழிவுகளை மர்மநபர்கள் எரிப்பதால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் - காரியாபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த கிராம மக்கள் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள எஸ்.கடமங்குளம் மற்றும் தோப்பூர் கிராமத்திற்கு அருகே உள்ள தெற்காற்றுப் பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக டன் கணக்கில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் சிலர் டயர், பிளாஸ்டிக், ரப்பர் கழிவுகள் மற்றும் ஆயில் வேஸ்டேஜ் பொருட்களை தீயிட்டு எரித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் காரியாபட்டியைச் சுற்றிலும் 10 கிலோமீட்டர் தொலைவிற்கு புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. மேலும் காற்று மாசுபாடு ஏற்பட்டு சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மூச்சு திணறல் மற்றும் தூக்கமின்மை, கண் எரிச்சல் ஏற்பட்டு வந்தது. மேலும் கெமிக்கல் பாட்டில்களையும் சேர்த்து எரிப்பதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதால் சட்ட விரோதமாக பிளாஸ்டிக் ரப்பர் கழிவுகளை எரிக்கும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இன்று காரியாபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் எஸ்.கடமங்குளம் மற்றும் தோப்பூர் கிராம மக்கள் வருவாய் தீர்வாய அலுவலரும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலருமான ரமேஷ் சிடம் மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட அதிகாரிகள் உடனடியாக பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், டன் கணக்கில் குவித்து வைக்கப்பட்ட ரப்பர் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தனர்.