குமரி மாவட்டம் குழித்துறை கோர்ட்டு ஊழியர் நாகராஜன் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய வேண்டும். கோர்ட்டு கடை நிலை ஊழியர்களின் பணி நேரத்தினை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்ட ஆதித்தமிழர் கட்சி சார்பில் நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் குமரேசன் தலைமை தாங்கினார். தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் ஆத்தியப்பன் முன்னிலை வகித்தார். இதில் தென் மண்டல தலைவர் பாஸ்கரன், மாவட்ட அமைப்புச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சி.பி.ஐ(எம்.எல்) நிர்வாகி மணவை கண்ணன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.