மருத்துவக்கல்லூரியில் அமைச்சர்கள் ஆய்வு
சிவகங்கை மருத்துவக்கல்லூரியில் அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர்;
சிவகங்கை மாவட்டத்தில், பொதுப்பணித்துறையின் சார்பில் சிவகங்கை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் கூடுதல் சீமாங்க் கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் குறித்து பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். உடன் நெடுஞ்சாலைத்துறை அரசு முதன்மை செயலாளர் செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உட்பட அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்