பேரிகை அருகே மாடு திருடிய மூன்று பேர் கைது.
பேரிகை அருகே மாடு திருடிய மூன்று பேர் கைது .;
கிருஷ்ணகிரி மவட்டம் சூளகிரி அருகே ஒட்டர் பாளையத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (33) விவசாயியான. இவர் மாடு வளர்த்து வருகிறார். சம்பவம் அன்று இவது வீட்டின் அருகே மாட்டு கொட்டகையில் கட்டி வைத்திருந்த மாடு திருடு போனது. பல இடங்களில் தேடியும் மாடு இல்லாததால் பேரிகை காவல் நிலையத்தில் சந்திரசேகர் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் அதில் ஆலுசாதனபள்ளியை சேர்ந்த முனிராஜ் (40) மடத்தூர் எல்லப்பா (30) தொட்டூர் சின்னசாமி (28) ஆகிய மூன்று பேர் மாட்டை திருடியது தெரியவந்தது. இதை அடுத்து போலீசார் மூன்று பேரை கைது செய்து மாடு மற்றும் அதை ஏற்றிச் சென்ற வேனை போலீசார் பறிமுதல் செய்தனர்