லஞ்சம் வாங்கிய விஏஓ - பிளக்ஸ் பேனர் வைத்த கட்சியினர்
சிவகங்கை அருகே லஞ்சம் வாங்கிய அதிகாரிகளை கண்டித்து பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டதால் பரபரப்பு;
சிவகங்கை மாவட்டம், கொட்டகுடி ஊராட்சி, பொய்யாமணிப்பட்டி கிராம ஏழை விவசாயிகளிடம், கீழக்கோட்டை குரூப் கிராம நிர்வாக அலுவலர் (VAO) மற்றும் தளையாரி (கிராம உதவியாளர்) ஆகியோர் லஞ்சம் வாங்கிக் கொண்டு பட்டா கொடுத்ததாக சிலரது பெயர்களையும், அவர்கள் கொடுத்த லஞ்சத்தின் விவரங்களையும், லஞ்சம் வாங்கிக்கொண்டு இன்னும் பட்டா கொடுக்காதவர்கள் விவரம் என பதிவிட்டு அப்பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பேனர் வைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது