பணி நியமன ஆணையினை வழங்கிய ஆட்சியர்
சிவகங்கையில் பணி நியமன ஆணையினை ஆட்சியர் வழங்கினார்;
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (22.05.2025) நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், கிருங்காக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் எழுத்தராக பணிபுரிந்த நபர் பணியிடையே மரணமடைந்ததையொட்டி, இறந்த நபரின் வாரிசுதாரரான அந்நபரின் மகளுக்கு கருணை அடிப்படையிலான பணிநியமன ஆணையினை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் வானதி, இணைப் பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) இராஜேந்திர பிரசாத், இணை இயக்குநர் (வேளாண்மை) சுந்தரமகாலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்