குமரி  தேசிய நெடுஞ்சாலையில் முறிந்து விழுந்த மரம் 

களியக்காவிளை;

Update: 2025-05-22 15:38 GMT
நாகர்கோவில் -  திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் படந்தாலுமூடு பகுதியில் சாலையோரம் நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த, பொதுப்பணி துறைக்கு சொந்தமான  மாமரம்  ஒன்று காணப்பட்டது.       இந்நிலையில் இன்று காலை அந்த ராட்சத மாமரம் சாலையின் குறுக்கே முறிந்து விழுந்தது.   நல்வாய்ப்பாக அந்நேரம் வாகனங்கள் எதுவும் கடந்து செல்லாததாலும் ஆட்கள் கடந்து செல்லாததாலும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.  இதில் சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினி லாரி  சேதம் அடைந்தது. அந்த லாரியில் ஓட்டுநர் இருக்கையில் ஓட்டுநர் ஒருவர் தூங்கி கொண்டிருந்தார். அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.  மேலும் உயர் மின் அழுத்த கம்பியின் மீது விழுந்ததால் மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால் அந்த பகுதியில் மின் விநியோகம் தடை பட்டது  தகவல் அறிந்த குழித்துறை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பொது மக்களோடு இணைந்து மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் களியக்காவிளை நாகர்கோவில் தேசீய நெடுஞ்சாலையில்  பல மணி நேரம் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Similar News