துப்பாக்கி சூட்டில் பலியானவருக்கு அமைச்சர் மலர் தூவி அஞ்சலி!

தூத்துக்குடியில் போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தி 15 பேர் உயிரிழந்தனர். ஏழாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் தூத்துக்குடி கலைஞர் அரங்கில் வைக்கப்பட்டிருந்த 13 பேரின் திருஉருவ படத்திற்கு அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் திமுகவினர் மலர் தூவி மரியாதை .;

Update: 2025-05-22 17:06 GMT
தூத்துக்குடியில் போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தி 15 பேர் உயிரிழந்தனர். ஏழாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் தூத்துக்குடி கலைஞர் அரங்கில் வைக்கப்பட்டிருந்த 13 பேரின் திருஉருவ படத்திற்கு அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினார் தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக தெரிவித்து தூத்துக்குடி சேர்ந்த மக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தினார்கள் இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்த சென்ற பொதுமக்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் 15பேர் பலியானார்கள் இந்த சம்பவத்தின் ஏழாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது இதைத்தொடர்ந்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் அரங்கில் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேரில் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் திமுக மாவட்ட செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சருமான கீதா ஜீவன் கலந்துகொண்டு 13 பேரில் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், மாநில பேச்சாளர் சரவெடி சரத்பாலா, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், துணை மேயர் ஜெனிட்டா, பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், நிர்மல், திமுக மாவட்ட பிரதிநிதி தெர்மல் சக்திவேல், பெருமாள் கோவில் அறங்காவல குழு தலைவர் செந்தில்குமார், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தேவி, நகர துணை செயலாளர் ரவி, திமுக வட்ட செயலாளர்கள் கதிரேசன், வழக்கறிஞர் சதீஷ்குமார், கங்கா ராஜேஷ், இளைஞர் அணி அருண்குமார், சூரியா, மாமன்ற உறுப்பினர் ஜெயசீலி, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Similar News