கிருஷ்ணகிரியில் சட்டமன்றப் பேரவை, மதிப்பீட்டுக் குழுவினர் ஆய்வுக் கூட்டம்
கிருஷ்ணகிரியில் சட்டமன்றப் பேரவை, மதிப்பீட்டுக் குழுவினர் ஆய்வுக் கூட்டம்;
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு மதிப்பீட்டுக் குழு (2024-26) மாவட்ட திட்டப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, மதிப்பீட்டுக் குழுத்தலைவர்/வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.காந்திராஜன் அவர்கள் தலைமையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு முதன்மைச் செயலாளர் கி.சீனிவாசன், மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார், மதிப்பீட்டுக் குழு எம்.எல்.ஏக்கள் தா.உதயசூரியன் (சங்கராபுரம்), சேவூர் எஸ்.இராமச்சந்திரன் (ஆரணி), எஸ்.எஸ்.பாலாஜி (திருப்போரூர்), எஸ்.பி.வெங்கடேசன் (தருமபுரி) ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. உடன், பர்கூர் எம்.எல்.ஏ. மதியழகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள் உள்ளிட்ட பலர் உள்ளனர்.