ஜவளகிரி காட்டுயானை புகுந்து தக்காளி தோட்டங்களில் அட்டகாசம்.

ஜவளகிரி காட்டுயானை புகுந்து தக்காளி தோட்டங்களில் அட்டகாசம்.;

Update: 2025-05-23 02:41 GMT
கிருஷ்ணகிரி மவட்டம் ஜவளகிரி கிராமத்தில் புகுந்த காட்டு யானை ஒன்று நேற்று முன்தினம் இரவு விவசாயிகளின் தக்காளி தோட்டங்களில் புகுந்தது. அறுவடைக்கு தயாராக இருந்த தக்காளி பயிர்களை தின்றும் காலால் மிதித்தும் சேதம் செய்தன இதை அறிந்து அங்கு சென்ற விவசாயிகள் சேதமான தக்காளி தோட்டத்தை பார்த்து வேதனை அடைந்தனர். இது குறித்து அவர்கள் ஜவளகிரி வனத்துறைக்கு தகவல் கொடுத்னர். அதன்பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து சேதமடைந்த தக்காளி தோட்டத்தை பார்வை யிட்டு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

Similar News