புதுக்கடை அருகே மேலங்கலம் பகுதி நெல்லிக்காவிளை என்ற இடத்தை சேர்ந்தவர் மகேஷ் (40). இவர் வெல்டிங் வேலை செய்து வந்தார். இவருக்கு மோனிஷா (37) என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். மகேசுக்கு குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டு, கடந்த ஒரு ஆண்டாக மோனிஷா தனது மகளுடன் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதனால் மகேஷ் மனவருத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்த நிலையில் மகேஷ் காணப்பட்டார். இதுகுறித்து மகேஷின் தாயார் குளோறி (71) என்பவர் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து, உடலை குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி, மேலும் விசாரித்து வருகின்றனர்.