கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் வைகாசி பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்து அய்யா சிவ சிவ சிவ சிவ அரகரா அரகரா என மந்திரம் முழங்க அய்யாவை தரிசனம் செய்தனர். மேலும் வரும் 10-ம் திருவிழாவான ஜூன் 2-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11 மணிக்கு இந்திர விமான வாகன பவனி, 11ம் திருவிழாவான ஜூன் மாதம் 3-ம் தேதி திங்களன்று நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைப்பெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு தினமும் சிறப்பு பணிவிடைகள், உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, வாகன பவனி மற்றும் அய்யா வைகுண்டர் கலையரங்கத்தில் தினமும் அய்யாவழி சமய சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் நடக்க இருக்கிறது என அய்யா வைகுண்டசாமி தலைமை பதி நிர்வாகிகள் தெரிவித்தனர்.