கருப்பூர் அருகே வீட்டுக்குள் அழுகிய நிலையில் ஆண் பிணம்

போலீசார் விசாரணை;

Update: 2025-05-23 03:52 GMT
சேலம் மாவட்டம் கருப்பூர் அருகே கொட்டகவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 44), கூலி தொழிலாளியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இவரது வீட்டுக்கு கடந்த 2 நாட்களாக யாரும் செல்லவில்லையாம். இதற்கிடையே நேற்று வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த போது ராமகிருஷ்ணன் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்த கருப்பூர் போலீசார் விரைந்து வந்து ராமகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ராமகிருஷ்ணன் அளவுக்கு அதிகமாக மது குடித்து மயக்க நிலையிலேயே இருந்துள்ளார். ஆனால் அவர் எப்படி இறந்தார் என்ற விவரம் தெரியவில்லை. எனவே ராமகிருஷ்ணன் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

Similar News