டெய்லர் குத்திக் கொலை - ஓட்டல் ஊழியர் கைது

நாகர்கோவில்;

Update: 2025-05-23 10:45 GMT
கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் செல்வன். (60) நாகர்கோவில் டதி ஸ்கூல் அருகே டெய்லர் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு இவர் டெய்லர் கடையில் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இவரிடம் துணி தையல் கொடுக்க வந்த போலீஸ்காரர் இதை பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். வடசேரி போலீசார் செல்வன் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட செல்வனின் மகன் மிக்கேல் ராஜ் (28) அளித்த புகாரின் பேரில் வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். சம்பவப் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் கொலை நடந்த டெய்லர் கடையில் இருந்து சட்டை அணியாமல் ஹெல்மெட் மட்டும் அணிந்து கொண்டு வெளியேறும் வாலிபர், பின்னர் பைக்கில் செல்லும் காட்சிகள் இருந்தன. இதில் செல்வினை கொலை செய்தது தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை அடுத்த செய்துங்க நல்லூர் பகுதியை சேர்ந்த சந்திரமணி (37) என்பது தெரிய வந்தது. நாகர்கோவிலில் உள்ள ஒரு ஓட்டலில் வைத்து இன்று காலை அவரை தனிப்படை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

Similar News