பல்பொருள் அங்காடியில் நூதன முறையில் திருட்டில் ஈடுபட்ட பெண்கள் மீண்டும் திருட வந்ததால் கடை ஊழியர்களிடம் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பல்பொருள் அங்காடியில் நூதன முறையில் திருட்டில் ஈடுபட்ட பெண்கள் மீண்டும் திருட வந்ததால் கடை ஊழியர்களிடம் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது;
விருதுநகர் பல்பொருள் அங்காடியில் நூதன முறையில் திருட்டில் ஈடுபட்ட பெண்கள் மீண்டும் திருட வந்ததால் கடை ஊழியர்களிடம் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது விருதுநகர் சாத்தூர் சாலையில் புதிய பேருந்து நிலையம் அருகே ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட் இயங்கி வருகிறது இந்த சூப்பர் மார்க்கெட்டில் கடந்த 16ஆம் தேதி கடைக்கு பொருட்கள் வாங்குவது போல் வந்த நான்கு பெண்கள் தங்கள் அணிந்திருந்த சேலைக்குள் சோப்பு எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை திருடி சென்றுள்ளனர் இது குறித்த சிசிடிவி காட்சிகளுடன் கடையில் பணிபுரியும் மேலாளர் பிரவீன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட அதே பெண்கள் இன்று மீண்டும் கடைக்கு பொருள் வாங்குவது போல் வந்துள்ளனர் இதை அறிந்த கடையின் மேலாளர் பிரவீன் அந்த நான்கு பெண்களையும் கடைக்குள் பொருள் எடுக்க அனுமதித்து விட்டு கடையை பூட்டி உள்ளார் அதை தொடர்ந்து பஜார் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார் அங்கு வந்த காவல் துறையினர் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மதுரை மாவட்டம் விக்கிரமங்கலத்தைச் சார்ந்த ராக்கம்மாள் விஜயா முத்துப்பாண்டி அம்மாள் பாண்டியம்மாள் ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர் இவர்கள் இதுபோன்று பல்வேறு கடைகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது கைது செய்யப்பட்ட நான்கு பேரிடமும் பஜார் காவல் நிலைய படித்தார் விசாரணை நடத்தி வருகின்றனர்