ஓசூரில் கார் மோதி மூதாட்டி உயிரிழப்பு.
ஓசூரில் கார் மோதி மூதாட்டி உயிரிழப்பு.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அட்கோவை சேர்ந்தவர் ராமக்கா (65) இவர் கடந்த 20-ஆம் தேதி அன்று இரவு தனது பேரன் சீனிவாசன் (17) என்பவருடன் நடந்து சென்றபோது ஓசூர் ரிங்ரோடு சிவசக்தி நகர் அருகே பின்னால் வந்த ஒரு கார் மோதியது. இந்த விபத்தில் மூதாட்டி ராமக்கா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். அதில் மூதாட்டியின் பேரன் சீனிவாசன் பலத்த காயத்துடன் உயிர்தப்பினார். இந்த விபத்து குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.