கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் டூவீலர் திருட்டு.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் டூவீலர் திருட்டு.;

Update: 2025-05-23 13:59 GMT
திருப்பத்தூர் மாவட்டம் தகரகுப்பத்தை சேர்ந்தவர் குமார். இவருடைய உறவினருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதற்காக அவருக்கு உதவியாக குமார் மருத்துவமனையில் தங்கி இருந்தார். இந்த நிலையில் அவர் மருத்துவமனை வளாகத்தில் தனது டூவீலரை நிறுத்தி இருந்தார். நேற்று அதிகாலை வந்து பார்த்தபோது அவரது டூவீலரை காணவில்லை. இதுகுறித்து குருபரப்பள்ளி போலீசில் புகார் கொடுத்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி டூவீலரை திருடிய நபரை தேடி வருகின்றனர்.

Similar News