விபத்தில் படுகாயம் அடைந்த சிறுமியும் உயிரிழப்பு

பேச்சிப்பாறை;

Update: 2025-05-24 03:55 GMT
நாகர்கோவில், கீழப் பெருவளை சேர்ந்த காட்சன் சாமுவேல் என்ற கிறிஸ்தவ மதப் போதகர் பனை மர ஆய்வாளராக உள்ளார்.  இவர் மும்பையில் தற்போது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 19ஆம் தேதி இவரது  குடும்பத்தினர் உட்பட 20 பேர் கொண்ட கும்பல் கோதையாறு அருகே பழங்குடி கிராமத்திற்கு சென்றனர். அங்கு மக்களை சந்தித்து கலந்துரையாடி, மதிய சாப்பாட்டிற்காக ஒரு மரத்தின் அடியில் அமர்ந்திருந்தனர். அப்போது மரத்தின் பெரிய கிளை ஒன்று முறிந்து விழுந்ததில் காட்சன் சாமுவேலின் இளைய மகன் மித்ரன் (13) மற்றும் ஜெயக்குமார் என்பவரின் மகள் ஹெஸ்லின் (5)  படுகாயம் அடைந்தனர். இதில் மித்திரன் ஆஸ்பத்திரி கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். ஆஸ்பத்திரி சிகிச்சை பெற்று வந்த ஹெஸ்லின் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து பேச்சிப்பாறை  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News