சேலம் மாநகராட்சி பகுதியில் அனைத்து தொழில் நிறுவனங்களும் உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும்
மாநகராட்சி ஆணையாளர் வலியுறுத்தல்;
சேலம் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் விதிகள் 2023-ன்படி சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் அனைத்து தொழில், உற்பத்தி மற்றும் வணிகத்துக்கு நிர்ணயம் செய்யப்பட்ட தொழில் உரிம கட்டணத்தை செலுத்தி மாநகராட்சியின் தொழில் உரிமம் பெற்றுக் கொண்டு தொழில் நடத்திட வேண்டும். ஒவ்வொரு தொழில் உற்பத்தி மற்றும் வணிக நிறுவனங்களும் https://tnurbaneseva.tn.gov.in என்ற இணையதளம் வழியாக உடனே தொழில் உரிம கட்டணம் செலுத்தி தொழில் உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும். உதவி தேவைப்படுவோர் அருகில் உள்ள சம்பந்தப்பட்ட கோட்ட துப்புரவு ஆய்வாளர் அலுவலகத்தை அணுகி அவர்களின் உதவியுடன் கட்டணம் செலுத்தி தொழில் உரிமம் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தொழில் உரிமம் பெறாமல் மாநகராட்சி எல்கைக்குள் எந்தவொரு தொழில் நிறுவனங்களும் செயல்பட கூடாது. தொழில் உரிமம் இல்லாத வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.