சார்ந்தோர் சான்றிதழ் கோரி முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்
கலெக்டர் பிருந்தா தேவி தகவல்;
சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு கல்வி நிலையங்களில் பல்வேறு படிப்புகளுக்கு சிறப்பு இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2025-2026-ம் கல்வியாண்டு கல்லூரியில் சேர சார்ந்தோர் சான்றிதழ் பெறுவதற்கு http://exwel.tn.gov.in என்ற இணையதளத்தில் வழிமுறைகள் மற்றும் சான்றிதழ் விண்ணப்ப படிவம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டிற்கு, முந்தைய கல்வி ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட சார்ந்தோர் சான்றிதழை பயன்படுத்த கூடாது. புதியதாக சார்ந்தோர் சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். மருத்துவ படிப்புகளுக்கு முன்னுரிமை பெற தகுதி படைத்தவர்கள் தேவையான ஆவணங்களை பணிபுரிந்த ஆவணக்காப்பகத்தில் இருந்து பெற்று சார்ந்தோர் சான்றிதழ் பெறும் போது சமர்ப்பிக்க வேண்டும். ஒரு படிப்பிற்காக வழங்கப்படும் சான்றிதழை மற்றொரு படிப்பிற்கு பயன்படுத்த கூடாது. இவ்வாறு வழங்கப்படும் சான்றிதழ்களுக்கு இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து மேலொப்பமிட்ட மதிப்பெண் பட்டியல் மற்றும் முன்னாள் படைவீரர்களின் படைவிலகல் புத்தகத்தையும் நேரில் அல்லது இணையதளம் மூலமாக விண்ணப்பித்து பயனடையலாம். இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.