பெரியார் பல்கலைக்கழக தற்காலிக துணைவேந்தர் நியமனத்துக்கு எதிர்ப்பு:
தொழிலாளர் சங்கத்தினர் முற்றுகை போராட்டம்;
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் பணி ஓய்வு பெற்றார். அவருக்கு பதிலாக தற்காலிக துணைவேந்தராக தமிழ்த்துறை தலைவர் பெரியசாமி நியமிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று பல்கலைக்கழக வளாகத்துக்குள் பெரியார் சிலை முன்பு தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினர். சங்க தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் சக்திவேல் கலந்து கொண்டு பேசினார். இந்த போராட்டத்துக்கு 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.