வீட்டின் மீது விழுந்த  செல்போன் டவர் 

இரணியல்;

Update: 2025-05-24 13:15 GMT
குமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள கண்டன் விளை பகுதி சேர்ந்தவர் ராஜமல்லி. அங்கன்வாடி பள்ளி ஆசிரியை. இவருக்கு கணவர் இல்லை. இதனால் தனது இரண்டு மகளுடன் அவர் அங்கு வசித்து வருகிறார். இவர்கள் நேற்று அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மழையுடன் பலத்த காற்று வீசியது.      அப்போது  வீட்டு அருகில் இருந்த தனியார்  செல்போன் டவர் திடீரென சரிந்து ராஜமல்லியின் வீட்டின் மேல் கூரையில் பயங்கர சத்தத்துடன் விழுந்தது.  மேலும் மற்றொரு வீட்டின் காம்பவுண்ட் சுவர் இடித்து தள்ளியது.        இதில் ராஜமல்லியின் வீடு கடுமையாக சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் மயிரிழையில்  உயிர்தப்பினர். எனினும் செல் போன் டவர் விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டது.       சுமார் 150 நீளம் உள்ள இந்த செல்போன் டவர் கடந்த 2004 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த டவர் தற்போது பயன்பாட்டில் இல்லை. செல்போன் டவர் சரிந்து விழுந்த போது அதனுடன் அருகில் நின்ற பலா மரம் சாய்ந்து, மின்கம்பிகள் மீது விழுந்ததால் மின்சாரம் தடைபட்டது.

Similar News