*விருதுநகர் மாவட்டம் சதுரகிரியில் சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் அதிகாலை முதல் மலை ஏறி சென்று சாமி தரிசனம்.*
*விருதுநகர் மாவட்டம் சதுரகிரியில் சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் அதிகாலை முதல் மலை ஏறி சென்று சாமி தரிசனம்.*;
விருதுநகர் மாவட்டம் சதுரகிரியில் சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் அதிகாலை முதல் மலை ஏறி சென்று சாமி தரிசனம். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பா அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு இன்று சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டுதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த திரளான பக்தர்கள் அதிகாலை தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு குவிந்தனர். காலை 6:00 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மலையேறி சென்றனர்.தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்களின் உடைமைகளை வனத்துறையினர் சோதனை செய்த பின்னரே பக்தர்களே அனுமதித்தனர். சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமிக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.என்ன சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சுவாமி காட்சியளித்தார் இந்த பிரதோஷ வழிபாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.பக்தர்கள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்க உள்ள நிலையில் 10 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளதையொட்டி நீரோடை பகுதிகளில் தீயணைப்பு துறையினர், வனத்துறையினர், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.