சிறப்பு இருதய பரிசோதனை முகாம் நடைபெற்றது

சிறப்பு இருதய பரிசோதனை முகாம் நடைபெற்றது;

Update: 2025-05-24 14:52 GMT
அருப்புக்கோட்டை ரோட்டரி சங்கம், முதல்வர் மருந்தகம் மற்றும் காவேரி மருத்துவமனை இணைந்து நடத்திய இருதய பரிசோதனை முகாம் அருப்புக்கோட்டை தெற்கு தெருவில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு ரோட்டரி சங்கத் தலைவர் கனகராஜ் தலைமை வகித்தார். செயலாளர் முத்துவேல் அனைவரையும் வரவேற்றார். இந்த முகாமை நகர்மன்ற முன்னாள் தலைவர் சிவப்பிரகாசம், துணைத்தலைவர் பழனிச்சாமி துவக்கி வைத்தனர். மாவட்ட ரோட்டரி முதன்மை துணை ஆளுநர் ஜெயபிரகாஷ் நாராயணசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் திமுக நகர செயலாளர் மணி, ஆலிவ் குழும நிறுவன தலைவர் செல்லத்துரை, நகர் மன்ற உறுப்பினர் ஜெயகவிதா, ரோட்டரி சங்க பொருளாளர் இளங்கோ, தலைவர் தேர்வு ரவி கணேஷ், செயலாளர் தேர்வு செல்வம், ரோட்டரி சங்க நிர்வாகிகள் உதயகுமார், பிச்சைமணி, சிவகுமார்‌ உள்ளிட்ட ரோட்டரி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் மாதேஸ்வரன் தலைமையில் மருத்துவ குழுவினர் மருத்துவ பரிசோதனை செய்தனர். இந்த மருத்துவ பரிசோதனையில் பொது மக்களுக்கு ரோட்டரி கர்மவீரர் காமராஜர் இதய பாதுகாப்பு ஊர்தி மூலம், ஒருங்கிணைப்பாளர் சரண்ராஜ் தலைமையில் இசிஜி, எக்கோ, ரத்த அழுத்தம், நுரையீரல் பாதுகாப்பு பரிசோதனை, பிஎம்ஐ, நாடித்துடிப்பு சர்க்கரை பரிசோதனை உள்ளிட்ட உயர் பரிசோதனைகள் அனைத்தும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது. முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.‌ முகம் ஏற்பாட்டினை அருப்புக்கோட்டை ரோட்டரி சங்கத்தினர் மற்றும் முதல்வர் மருந்தகத்தினர் செய்திருந்தனர்.

Similar News