முக்தீஸ்வரர் கோயிலில் பாலஸ்தாபன விழா
மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள முக்தீஸ்வரர் கோயிலில் பாலஸ்தாபன விழா இன்று நடைபெற்றது;
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் உபகோவிலான மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிேஷக திருப்பணிகள் நடபெறுவதை முன்னிட்டு இன்று (மே.25) காலை பாலஸ்தாபன விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.அதனை தொடர்ந்து திருப்பணிகள் தொடங்கப்பட்டன.