கோவை: குற்றாலம் சூழல் சுற்றுலா அருவி இன்று மூடல் !
கோவையில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் ரெட் அலர்ட் எச்சரிக்கையைத் தொடர்ந்து, இன்று இரண்டாம் நாளாக தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.;
கோவையில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் ரெட் அலர்ட் எச்சரிக்கையைத் தொடர்ந்து, இன்று இரண்டாம் நாளாக தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் கோவை குற்றாலம் அருவியில் நீர்வரத்து பெருமளவு அதிகரித்துள்ளது. இதனால் அருவி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இன்று மற்றும் நாளை கோவை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு வனத்துறை இந்த தற்காலிக மூடல் முடிவை எடுத்துள்ளது. அருவியில் நீர்வரத்து சீராகும் வரை கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா மூடப்பட்டிருக்கும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வனத்துறையின் இந்த அறிவிப்பிற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.