தேனி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று (மே.24) பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது அப்பகுதியில் உள்ள கண்மாய் அருகே நடராஜன் (65) என்பவர் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரிடமிருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் நடராஜன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.