அருமனை பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் (40). கேரள மாநில எல்லைப் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் தொழிலாளியாக வேலை செய்கிறார். இவரது மனைவி ரெஜிலா. இந்த தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். ஜஸ்டின் மது குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து துன்புறுத்துவது வழக்கம். இந்த நிலையில் பளு கல் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஜஸ்டின் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் தனிமையில் இருந்ததை பார்த்த பொதுமக்கள் இருவரையும் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதற்கு பின் மீண்டும் மது போதையில் வீட்டுக்கு வந்த ஜஸ்டின் மனைவியை அடித்து துன்புறுத்தி கொடுமை ப்படுத்தி உள்ளார். அக்கம் பக்கத்தினர் ரெஜிலாவை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் அருமனை போலீசார் மனைவியை அடித்து கொடுமைப்படுத்திய ஜஸ்டினை கைது செய்து குழித்துறை கோர்ட்டில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தனர்.