திருவனந்தபுரம் கோட்டத்தில் ரயில்கள் போக்குவரத்தில் மாற்றமில்லை

ரயில்வே அறிவிப்பு;

Update: 2025-05-25 11:14 GMT
திருவனந்தபுரம் கோட்டத்தில் பொறியியல் சார்ந்த பணிகள் நடைபெறுவதாக வரும் ஜூன் 10, 11ம் தேதிகளில் அறிவிக்கப்பட்டிருந்த போக்குவரத்து மாற்றங்கள் திரும்ப பெறப்படுகிறது. என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில் எண் 12665 ஹவுரா - கன்னியாகுமரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஜூன் 9ம் தேதி ரயில் எண் 20691 தாம்பரம் - நாகர்கோவில் ஜங்ஷன் அந்தியோதயா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஜூன் 10ம் தேதி ரயில் எண் 22627 திருச்சி - திருவனந்தபுரம் சென்ட்ரல் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஜூன் 11ம் தேதி ரயில் எண் 20692 நாகர்கோவில் ஜங்ஷன் - தாம்பரம் அந்தியோதயா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஜூன் 11ம் தேதி ரயில் எண் 16321 நாகர்கோவில் ஜங்ஷன் - கோவை எக்ஸ்பிரஸ், ஜூன் 11ம் தேதி ரயில் எண் 22628 திருவனந்தபுரம் சென்ட்ரல் - திருச்சி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஜூன் 11ம் தேதி இயக்கப்படுவது வழக்கம்போல் இயக்கப்படும். ரயில் போக்குவரத்தில் மாற்றம் ஏதும் இருக்காது. இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News