ராஜபாளையத்தில் நடைபெற்ற தவ்ஹீத் ஜமாத் மாவட்ட பொதுக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராஜபாளையத்தில் நடைபெற்ற தவ்ஹீத் ஜமாத் மாவட்ட பொதுக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;

Update: 2025-05-25 15:00 GMT
தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல் இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டை 3.5 விழுக்காட்டில் இருந்து 7 விழுகாடாக உயர்த்தி தர வேண்டும் என ராஜபாளையத்தில் நடைபெற்ற தவ்ஹீத் ஜமாத் மாவட்ட பொதுக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் அக்கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில செயலாளர் முகமது ஒலி நிகழ்ச்சியின் நிறைவில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வக்ஃபு திருத்த சட்டம் இஸ்லாமியர்களின் சொத்துகளை அபகரிக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. விசாரணை நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்திய நாடு இஸ்லாமியர்களுக்கு வழங்கியுள்ள சுதந்திரத்தை முறைப்படி வழங்கும் வகையில் தீர்ப்பு இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். கடந்த சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் கூறியது போல், ஏற்கனவே இஸ்லாமியர்களுக்கு இருக்கக்கூடிய 3.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை 7 விழுக்காடாக உயர்த்தி வழங்க வேண்டும். பாலஸ்தீனத்தில் பசியால் உயிரிழக்கக் கூடிய நிலையில் உள்ள குழந்தைகளையும், பெண்களையும், பொதுமக்களையும் காப்பாற்ற ஒட்டுமொத்த உலக நாடுகளும் இணைந்து இஸ்ரேல் அரசை வலியுறுத்தி பாதிக்கப்படும் அப்பாவி மக்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Similar News