தஞ்சாவூர் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது நாசாவின் முதல் இந்திய பெண் வீராங்கனையான கல்பனா சாவ்லாவின் துணிச்சலை பாராட்டும் வகையில் தமிழக அரசு 2025ம் ஆண்டுக்கான தைரியம் மற்றும் துணிச்சலான நிறுவனத்துக்கு கல்பனா சாவ்லா விருதுகளை வழங்கி வருகிறது. இந்த விருது சமூகநலத் துறை மூலம் தமிழக முதல்வரால் சுதந்திர தினத்தன்று வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு விண்ணப்பம் செய்ய தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (awards.tn.gov.in) விண்ணப்பிக்க வேண்டும். 2025ம் ஆண்டுக்கான தைரியம் மற்றும் துணிச்சலான நிறுவனத்துக்கு கல்பனா சாவ்லா விருதுகள் விண்ணப்பம் செய்ய தமிழக அரசின் விருது (https://awards.tn.gov.in) பதிவு செய்வதற்கான விதிமுறைகள்.தமிழகத்தை பிறப்பிடமாக கொண்டிருத்தல் வேண்டும். தைரியம் மற்றும் துணிச்சலான செயல் புரிந்திருக்க வேண்டும். இணையவழியில் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் வரும் ஜூன் 16ம் தேதியாகும். இதற்கான விண்ணப்ப படிவங்கள் மற்றும் விபரங்களை அறை எண்.303, 3வது தளம், மாவட்ட சமூக நல அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம், தஞ்சை என்ற முகவரியில் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.