தஞ்சாவூரில் ஓய்வு பெற்ற காவல் துணைக் கண்காணிப்பாளர் சி.ராஜமாணிக்கம் எழுதிய, 'செவ்வியல் நோக்கில் சிலப்பதிகாரம்' என்கிற நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்நூலை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு வெளியிட, அதை புலவர் ந. செந்தலை கௌதமன் பெற்றுக் கொண்டார். தஞ்சாவூர் சரகக் காவல் துணைத் தலைவர் ஜியா உல் ஹக், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம், கே.ஜி.ஆர். நிறுவன இயக்குநர் கி. கோவிந்தராஜன், சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மேம்பாட்டு சங்கப் பலகைத் தலைவர் கி. சங்கர நாராயணன், ஆங்கிலத் துறைத் தலைவர் சூ. ஆம்ஸ்ட்ராங், பெரியகோயில் சதய விழாக் குழுத் தலைவர் து. செல்வம், உலகத் திருக்குறள் பேரவைச் செயலர் பழ. மாறவர்மன், இராசராசன் கல்வி பண்பாட்டுக் கழக மாநிலத் தலைவர் துரைராஜ் கண்டியர், வழக்குரைஞர் ம. குலோத்துங்கன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். நூலாசிரியர் முனைவர் சி. ராஜமாணிக்கம் ஏற்புரையாற்றினார். திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் துரை.சந்திரசேகரன், தஞ்சாவூர் மேயர் சண். ராமநாதன், திருச்சி மேயர் மு. அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத் தமிழ்ப் பண்டிதர் மணி. மாறன் வரவேற்றார். நிறைவாக, பொறியாளர் ம. மணிவண்ணன் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி இணைப் பேராசிரியர் வி.பாரி ஒருங்கிணைத்தார். பெட்டிச் செய்தி தி.மு.க., குறித்து முன்னாள் அமைச்சர் உதயகுமார் உண்மைக்குப் புறம்பாக பேசுகிறார்: அமைச்சர் நேரு தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில், கலந்து கொண்ட நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்களின் ஆதரவு குறிப்பாக பெண்களுடைய ஆதரவு தமிழக முதல்வருக்கு இருக்கிறது. வரும் சட்டசபைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். முதல்வராக ஸ்டாலின் தொடருவார். தமிழகத்தின் வளர்ச்சிக்காக, நிதி ஆயோக் கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டதை அ.தி.மு.கவினர் கொச்சைப்படுத்தி பேசுகின்றனர். தி.மு.க., குறித்து முன்னாள் அமைச்சர் உதயகுமார் உண்மைக்குப் புறம்பாக பேசி வருகிறார். முதல்வர் எப்போதும் நேருக்கு நேராகத்தான் பேசுவார். துணிந்து தனது கருத்தைத் தெரிவிப்பார். சிலரைப் போல் கைக்கட்டி நிற்க மாட்டார்" இவ்வாறு அவர் கூறினார்.