ரெட் அலர்ட் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி
கொளத்தூர் காவல் மாவட்டத்தின் சார்பில் போலீசார் ரெட்அலர்ட் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்வை நடத்தினர்.;
' ரெட் அலர்ட் ' போலீசார் நடத்திய பாதுகாப்பு ஒத்திகை நிகழ்வு. கொளத்தூர் காவல் மாவட்டத்தின் சார்பில் போலீசார் ரெட்அலர்ட் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்வை நடத்தினர். சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில் இணை ஆணையர்கள் ஆலோசனையில் கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையாளர் பாண்டியராஜன் தலைமையில், ரெட் அலர்ட் ஒத்திகை பாதுகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் கொளத்தூர் காவல் சரக உதவி ஆணையாளர் செந்தில்குமார் , புழல் சரக உதவி ஆணையாளர் சத்யன், காவல் நிலைய ஆய்வாளர்கள் பூபாலன், பெருந்துறை முருகன், மூர்த்தி, மற்றும் உதவி ஆய்வாளர்கள் மாதவரம் ரவுண்டானா பஸ் நிலையம் மாதவரம் புழல் கொல்கத்தா நெடுஞ்சாலை மற்றும் ரெட்டேரி சந்திப்பு மதுரை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் பேரிடர் காலங்களில் பொதுமக்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் எனவும் பேரிடரின் போது குண்டு வெடிப்பு கட்டிடங்கள் இடிந்து விழுந்து இடர்பாடுகளில் சிக்கி உள்ள மக்களை காப்பாற்றுவது எப்படி எனவும் பொதுமக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையம் ,ரயில் நிலையம் ,வணிக வளாகங்கள் ,அரசு அலுவலகங்கள் மருத்துவமனை, வழிபாட்டுத் தலங்கள் , தங்கும் விடுதிகள் ,உணவகங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் போலீசார் பரவலாக பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வது குறித்தும், சந்தேகப்படும்படியான நபர்களை கண்டறிந்து அவர்களை சோதனை செய்வது எப்படி எனவும் முக்கிய பிரமுகர்களின் வீடுகளுக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பாகவும் ரெட் அலர்ட் என்ற பெயரில் இன்று கொளத்தூர் காவல் மாவட்ட பகுதிகளில் ராணுவத்திற்கு இணையாக போலீசார் களத்தில் இறங்கி அவ்வழியே வரும் இருசக்கர வாகனம் சொகுசு வாகனங்கள் அனைத்தையும் நிறுத்தி மர்ம பொருட்கள் ஏதேனும் உள்ளதா என சோதனை செய்தனர். திடீரென நடத்தப்பட்ட இந்த சோதனையால் வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்தில் உறைந்தனர்.