மறைந்த பெரியசாமி நினைவு நாள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

தூத்துக்குடி மாநகரின் வளர்ச்சிக்கு பாடுபட்ட மனிதருக்குள் மாணிக்கம் என் பெரியசாமி அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி அவரது உருவச்சிலைக்கு அமைச்சர்கள் கீதா ஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்;

Update: 2025-05-26 10:38 GMT
தூத்துக்குடி மாநகரின் வளர்ச்சிக்கு பாடுபட்ட மனிதருக்குள் மாணிக்கம் என் பெரியசாமி அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி அவரது உருவச்சிலைக்கு அமைச்சர்கள் கீதா ஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கலைஞரால் கலைஞரின் முரட்டு பக்தன் என அன்புடன் அழைக்பங என். பெரியசாமியின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள தட்டார்மடம் ஆகும். இவர் கலைஞர் கருணாநிதி மீது கொண்ட பற்றால் திமுகவில் இணைந்தார். 30 ஆண்டுகளாக திமுக மாவட்டச் செயலாளராக பதவி வகித்து வந்தார். மேலும் தூத்துக்குடி நகர்மன்றத் தலைவராகவும், 2 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் பொறுப்பு வகித்துள்ளார். அப்போது தூத்துக்குடி மாநகருக்கு மீன்வளக் கல்லூரி மருத்துவக் கல்லூரி, உள்ளிட்ட நகரின் பல்வேறு வளர்ச்சிக்குப் பாடுபட்டவர் தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. செயலாளராக இருந்த பெரியசாமி கலைஞரின் முரட்டு பக்தன் என கலைஞரால் அன்பால் அழைக்கப்பட்ட அவருக்கு 2016 ஆம் ஆண்டு கலைஞர் விருது பெற்றார். அன்னாரின் 8ம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. தூத்துக்குடி போல் பேட்டையில் உள்ள அவரது மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி, ஜீவன் ஜேக்கப், அசோக் டாக்டர் மகில் ஜீவன், அச்சை டேவிட் பெரிசன், மற்றும் குடும்பத்தினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், மாநகர செயலாளர் எஸ்.ஆர். ஆனந்தசேகரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஆறுமுகம், ராஜ்மோகன் செல்வின், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட திமுக பிரதிநிதி தெர்மல் சக்திவேல் பெருமாள் கோவில் அறங்காவல குழு தலைவர் செந்தில்குமார் மாநகராட்சி சுகாதார குழு தலைவர் எஸ். சுரேஷ்குமார், மாநில பேச்சாளர் சரத்பாலா, அரசு வழக்கறிஞர்கள் மோகன்தாஸ் ஆனந்த் கேப்ரியல், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சிஎம் மதியழகன் துணை அமைப்பாளர்கள் எம்.கே பிரதீப், மாநகராட்சி மண்டல தலைவர்கள் வழக்கறிஞர் பாலகுருசாமி, கலைச்செல்வி திலகராஜ், அன்னலட்சுமி கோட்டு ராஜா, நிர்மல்ராஜ், மாவட்ட மகளிரணி கவிதா, முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ராமகிருஷ்ணன், மேகநாதன், பொதுக்குழு உறுப்பினர் சி எஸ் ராஜா, கோட்டு ராஜா, மாமன்ற உறுப்பினர்கள் கீதா முருகேசன், முத்துவேல், மெட்டில்டா டேனியல், பவானி, ஜாக்குலின் ஜெயா செல்வகுமார், கனகராஜ், ரெங்கசாமி, சரண்யா, வைதேகி, முன்னாள் மாமன்ற உறுப்பினர் செந்தில்குமார், நவநீதன், ராஜாமணி, வட்டச் செயலாளர்கள் ரவீந்திரன், கதிரேசன், வழக்கறிஞர் சதீஷ்குமார், தகவல் தொடர்புத்துறை பிரிவு அபிராமி நாதன், மரிய அந்தோணி கண்ணன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண்,சூர்யா, முன்னாள் இளைஞர் அணி முத்து துரை பகுதி விளையாட்டு மேம்பாட்டு அணி ராஜா சுரேஷ்குமார், உள்ளிட்ட ஆயிரக்கணக்கான திமுகவினர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள் மேலும் காங்கிரஸ் கட்சி மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் மாமன்ற உறுப்பினர்கள் எடிண்டா, சந்திரபோஸ், உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மதிமுக மாவட்ட நிர்வாகி செல்லச்சாமி, நக்கீரன் மகாராஜன், மற்றும் கூட்டணி கட்சியினர் இதுபோல் பல்வேறு அமைப்பினரும் பொதுமக்களும் அரசியல் கட்சி பிரமுகர்களும் என்.பெரியசாமி உருவச் சிலைக்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். தூத்துக்குடி நகரின் வளர்ச்சிகளுக்கு பாடுபட்டவர் என். பெரியசாமி என்றால் அது மிகையல்ல அவர் நம்மை விட்டு மறைந்தாலும் அவர் ஆற்றிய மக்கள் பணி என்றும் நம் மனதில் நிலைத்து நிற்கும்.

Similar News