குரங்கணி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக கெட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு.

வெள்ளப்பெருக்கு;

Update: 2025-05-26 11:02 GMT
தேனி மாவட்டம் குரங்கணி வனப் பகுதி மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது . கடந்த இரண்டு மாத காலமாக நீர்வரத்து இன்றி காணப்பட்ட கொட்டகுடி ஆற்றில் தென்மேற்கு பருவமழை துவங்கியதிலிருந்து தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் நேற்று நீர்வரத்து துவங்கிய நிலையில் நேற்று விடிய விடிய பெய்த மழை காரணமாக தற்போது கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக போடி அருகே உள்ள கொட்டகுடி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைப்பிலையார் அணைக்கட்டு நீர்வீழ்ச்சியில் வெள்ள நீர் ஆர்ப்பரித்துக் கொண்டு வைகை அணைக்கு செல்கிறது. வெள்ள நீரில் மரங்கள் அடித்து வரப்பட்டு அணைக்கட்டின் மேல் பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ளது. தொடர்ச்சியாக வெள்ளப்பெருக்கு அதிகரித்து வரும் காரணத்தினால் மழை பெய்து வருவதாலும் கொட்டக்குடி ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவே ஆற்றைக் கடக்கவே கால்நடைகளை குளிப்பாட்டவோ வேண்டாம் என பொதுப்பணி துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அணைக்கட்டு நீர்வீழ்ச்சி பகுதிகளில் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் குளிக்க வேண்டாம் என காவல்துறையினரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News