மஹா பிரத்யங்கிரா தேவி திருக்கோயிலில் அமாவாசையை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு யாக பூஜையில் - திரைப்பட நடிகர் செந்தில்
பூஜை;
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே சீலையம்பட்டியில் ஸ்ரீ மகா பிரத்யங்கிரா தேவி திருக்கோயில் அமைந்துள்ளது இந்த திருக்கோயிலில் இன்று 101 வது அமாவாசையை முன்னிட்டு சிறப்பு யாக பூஜை நடைபெற்றது இந்த யாக பூஜையில் திரைப்பட நடிகர் செந்தில் தனது மனைவி மற்றும் இரு மகன்களுடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட யாகசாலையில் பிரத்தியங்கா தேவிக்கு மிளகாய் பூஜை யாகம் வளர்க்கப்பட்டது தொடர்ந்து பிரத்தியங்கிரா தேவிக்கு கலச நீரை ஊற்றி அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது இதில் கலந்துகொண்ட நடிகர் செந்தில் பிரத்தியங்கிரா தேவிக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றார் பின்னர் நடிகர் செந்தில் உடன் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர்