முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்புப் பகுதியில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு 487 கன அடியாக இருந்த நீர் வரத்து, வினாடிக்கு 584 கன அடியாக அதிகரித்தது. நீர்மட்டமும் சற்று உயர்ந்து 114.90 அடியாக இருந்தது. தமிழகப் பகுதிக்கு குடிநீருக்காக மட்டும் வினாடிக்கு 100 கன அடி இரைச்சல் பாலம் வழியாக திறக்கப்பட்டுள்ளது.