தேனி மாவட்டம், உப்புக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பார்த்தீபன். இவரது டூவீலரை சில தினங்களுக்கு முன்பு வீட்டிற்கு அருகே நிறுத்தியிருந்த நிலையில் காணாமல் போனது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பல்வேறு இடங்களில் தேடியும் டூவீலர் கிடைக்காத நிலையில் வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் நேற்று (மே.25) வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.