தேனி அருகே டொம்புச்சேரியை சேர்ந்தவர் சுரேஷ் (48). இவர் தேனியில் உள்ள தனியார் பருப்பு மில்லில் பணிபுரிந்து வந்தார். நேற்று (மே.24) இவர் மில் வளாகத்தில் கேமரா பொருத்தம் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தவறி கீழே விழுந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அல்லிநகரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.