தேனி மாவட்டம், ஆனைமலையன்பட்டி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் நேற்று (மே.25) அதே பகுதியை சேர்ந்த ரவுடியான அபிமன்யு என்பவர் பெட்ரோல் போட்டு விட்டு அதற்காக பணம் கொடுக்காமல் பெட்ரோல் பங்க் ஊழியர் முனியாண்டி என்பவரிடம் தகராறில் ஈடுபட்ட அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து அபிமன்யுவை தேடி வருகின்றனர்.