ரொம்ப சேரியில் சட்டவிரோதமாக மது பாட்டில் விற்றவர் கைது

கைது;

Update: 2025-05-26 12:06 GMT
தேனி மதுவிலக்கு காவல் நிலைய போலீசார் நேற்று டொம்புச்சேரி பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே ஈஸ்வரன் (64) என்பவர் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் ஈஸ்வரன் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Similar News