காட்டுநாயக்கன்பட்டியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
காட்டுநாயக்கன்பட்டி பள்ளியில் 1994 ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்களை சந்தித்து மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். ;
காட்டுநாயக்கன்பட்டி பள்ளியில் 1994 ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்களை சந்தித்து மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம், காட்டுநாயக்கன்பட்டியில் உள்ள நடராஜன் மேல்நிலைப் பள்ளியில் 1994 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு முடித்த 50 மாணவ- மாணவியர்கள் மற்றும் அவர்களுக்கு கற்பித்த 25 ஆசிரியர்கள் 31 வருடங்கள் கடந்து தாங்கள் பயின்ற பள்ளியில் ஆசிரியர்கள் - மாணவர்கள் சங்கம விழா நடத்தி குடும்ப உறுப்பினர்கள் 200 பேர் சங்கமித்திருக்கின்றார்கள். மறைந்த ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் நினைவேந்தல் வைத்து நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது ஆசிரியர்களும் மாணவர்களும் தங்கள் பள்ளிக்கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கப்பட்டது. மேலும், ஓவியப்போட்டி நடனப்போட்டி கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல போட்டிகள் நடைபெற்றது. விழாவில் அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.