அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதில் நடிகர் சாமி தரிசனம்

சாமித்தோப்பு;

Update: 2025-05-27 02:26 GMT
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த நடிகர் விஷால் நேற்று காலை சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் சாமி தரிசனம் செய்ய வந்தார். தலைப்பாகை அணிந்து பதியினுள் சென்ற நடிகர் விஷால் பள்ளியறையை சுற்றி வந்து பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தார். பதி நிர்வாகம் சார்பில் அவருக்கு நெற்றியில் திருநாமமிட்டு இனிமம் வழங்கப்பட்டது. பின்னர் சிறிது நேரம் பதியினுள் அமர்ந்திருந்துவிட்டு கிளம்பி சென்றார். அவருடன் கலப்பை மக்கள் இயக்க நிறுவனர் பி. டி. செல்வகுமார் உள்ளிட்ட பலர் வந்திருந்தனர்.

Similar News