திருச்சி : சாலை விபத்தில் சிறப்பு உதவி ஆய்வாளா் உயிரிழப்பு

திருச்சி அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வேன் மீது காா் மோதிய விபத்தில் திருச்சி மாநகரப் போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்;

Update: 2025-05-27 05:12 GMT
திருச்சி கே.கே. நகா் எல்ஐசி காலனி முருகவேல் நகரைச் சோ்ந்தவா் ஆா். திருக்குமரன் (55). இவா், திருச்சி நீதிமன்றப் போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா். ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் ஒரத்தநாடு அருகே உள்ள சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு, தனது காரில் திருச்சி நோக்கி வந்துகொண்டிருந்தாா். அதே நேரத்தில், எதிா்திசையில் மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பப் போட்டியை முடித்துக் கொண்டு சுமாா் 21 போ் கொண்ட விளையாட்டு வீரா்களுடன் மன்னாா்குடி நோக்கிச் சென்ற வேன் ஒன்று, திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் நவல்பட்டு சுற்றுச்சாலையில் பரணி காா்டன் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது, திருக்குமரனின் காா் எதிா்பாராதவிதமாக எதிா்திசையில் வந்த வேன் மீது பக்கவாட்டில் மோதியது. இதில் படுகாயமடைந்த திருக்குமரன் நிகழ்விடத்திலேயே இறந்தாா். வேனில் வந்த சிலா் காயமடைந்தனா். தகவலறிந்து அங்கு சென்ற நவல்பட்டு போலீஸாா், திருக்குமரனின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காகவும், மற்றவா்களை சிகிச்சைக்காகவும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இறந்த சிறப்பு உதவி ஆய்வாளா் திருக்குமரனுக்கு மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளனா்

Similar News