வில்வித்தை அசோசியேஷன் சார்பில் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது
திருவள்ளூர் மாவட்ட உட்புற மற்றும் வெளிப்புற வில்வித்தை அசோசியேஷன் சார்பில் மாவட்ட அளவிலான போட்டியில் 5 வயது முதல் 45 வயது உள்ளவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று அசத்தல். வெற்றி பெற்றவர்களுக்கு சைக்கிள், கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. ;
திருவள்ளூர் மாவட்ட உட்புற மற்றும் வெளிப்புற வில்வித்தை அசோசியேஷன் சார்பில் மாவட்ட அளவிலான போட்டியில் 5 வயது முதல் 45 வயது உள்ளவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று அசத்தல். வெற்றி பெற்றவர்களுக்கு சைக்கிள், கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்ட உட்புற மற்றும் வெளிப்புற வில்வித்தை அசோசியேஷன் சார்பில் மாவட்ட அளவிலான வில்வித்தைப் போட்டி திருவள்ளூர் அடுத்த காக்களூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வில்வித்தை அசோசியேஷன் தலைவரும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான கமாண்டோ பாஸ்கரன், காக்களூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சுபத்ரா ராஜ்குமார் ஆகியோர் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் திருவள்ளூர் நகர்மனற அதிமுக உறுப்பினர் சுமித்ரா வெங்கடேசன், தொழிலதிபர் வெங்கடேசன், வில்வித்தை அசோசியேஷன் செயலாளர் ஜி.தணிகைமலை, பயிற்சியாளர்கள் ஏகலைவன், பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போட்டியில் 5 வயது முதல் 8, 10, 13, 15, 18, 21 வயது வாரியாகவும், 25 முதல் 45 வயது வரை உள்ள 100-க்கும் மேற்பட்டவர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். 10 மீட்டர், 20 மீட்டர், 30 மீட்டர் தூரம் கொண்ட இந்த போட்டியில் முறைப்படி உடலில் வில்லை ஏந்தி, நிறத்தின் மையப் பகுதியில் அம்பு எய்தவர்களுக்கு 10 புள்ளிகளும், மஞ்சள் நிறத்தின் வேறு எங்கு எய்தாலும் 9 புள்ளிகளும், சிவப்பு நிறத்தில் 8, 7 புள்ளிகளும், நீல நிறத்தில் 6,5 புள்ளிகளும் கருப்பு நிறத்தில் 4, 3 புள்ளிகளும் வெள்ளை நிறத்தில் 2 , 1 புள்ளிகள் வீதம் மதிப்பெண் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிக புள்ளிகள் எடுத்தவர்கள் வாரியாக தேர்வு செய்யப்பட்டு, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சைக்கிள், கேடயம், கோப்பை, பதக்கம் ஆகியவற்றை முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் சுபர்ரா ராஜ்குமார், திருவள்ளூர் நகர்மன்ற உறுப்பினர் சுமித்ரா வெங்கேடசன், காக்களூர் ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் எம்.எஸ்.சிவராமகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினர். மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்றவர்கள் வருகிற செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பார்கள் எனவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.