குமரியில் யானைகளால் விவசாயிகள் பாதிப்பு

எம் எல் ஏ கோரிக்கை;

Update: 2025-05-27 12:10 GMT
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி வனச் சரகத்திற்குட்பட்ட தெள்ளாந்தி ஊராட்சி தாடக மலை அடிவாரத்தில் காட்டு யானைகள் புகுந்து 2½ ஏக்கரில் பயிரிடப்பட்ட 1,300-க்கும் மேற்பட்ட வாழை மற்றும் தென்னை மரங்களை சேதப்படுத்தின. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். முன்னாள் அமைச்சர் என். தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ, பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். யானைகள் ஊருக்குள் வராமல் தடுப்புச்சுவர் அமைக்க வனத்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் நீர்வள ஆதார அமைப்பு இணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Similar News