சர்வதேச நாடுகளுக்கு மருத்துவ பொருட்கள் அனுப்ப நடைமுறை

தபாலில் அனுப்பலாம;

Update: 2025-05-27 12:20 GMT
கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் கா. செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:- இந்திய தபால்துறையின் தமிழ்நாடு வட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, தனிப்பட்ட பயனுக்காக இந்தியாவிலிருந்து அனுப்பப்படும் சர்வதேச மருத்துவ பொருட்களுக்கு, இனிமேல் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் (CDSCO) வழங்கும் No Objection Certificate (NOC) இல்லாமலும் அனுப்ப முடியும். தேவையான ஆவணங்கள்: CDSCO உதவி மருந்து கட்டுப்பாட்டு அலுவலருக்கு வேண்டுகோள் கடிதம், மருத்துவர் பரிந்துரை சான்று (கையொப்பம், முத்திரை, பதிவு எண் இருக்க வேண்டும்), மருந்து வாங்கிய பில் நகல், நோயாளியின் பாஸ்போர்ட், விசா நகல், அனுப்புநரின் அடையாள அட்டை நகல். இந்த நடைமுறையால், அஞ்சலக வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் மருந்துப் பொருட்களை சர்வதேச நாடுகளுக்கு தபால்துறை வழியாக சுலபமாக அனுப்பி பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.

Similar News