தொடர் சாரல் மழையினால் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி பணிகள் நிறுத்தம்....
தொடர் சாரல் மழையினால் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி பணிகள் நிறுத்தம்....;
தொடர் சாரல் மழையினால் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி பணிகள் நிறுத்தம்.... விருதுநகர் மாவட்டத்தின் பிரதான தொழிலான பட்டாசு உற்பத்தி பணிகள் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் சாரல் மழையின் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பட்டாசு உற்பத்தி பணிக்கு போதுமான வெப்பநிலை இல்லாதது, குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதோடு அவ்வப்போது பெய்து வரும் சாரல் மழையின் காரணமாக பட்டாசு தயாரிப்பிற்கு உகந்த தட்பவெப்ப சூழல் இல்லாததால் பட்டாசு உற்பத்தி பணிகளை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுமார் 1100 பட்டாசு ஆலைகளில் 4 லட்சம் தொழிலாளர்கள் வேலையின்றி வீட்டில் முடங்கியுள்ளனர்.